இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலை திருத்தப்படும் என அறிவிப்பு!!

Fuel

 எதிர்வரும் நாட்களில் இலங்கையில் எரிபொருள் விலையைத் திருத்துவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தயாராகி வருவதாக அதன் செயலாளர் எம்.பி.டி.யு.கே.  மாபா பத்திரன தெரிவித்துள்ளார்.

இம்முறை எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என ஏலவே அய்வரி செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அதனை மாபா பத்திரன உறுதிப்படுத்தியுள்ளார். 

ஆனால் எந்தளவுக்கு எரிபொருள் விலை குறைக்கப்படும் என்று அவர் தகவல் வழங்கவில்லை என்றாலும் பெரும்பாலும் விலைக்குறைப்பு நாளை அல்லது மறுநாள் விரைவில் நிகழலாம் என்று அவர் கூறினார்.

“தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருள் விலை சூத்திரத்தின் படி நாங்கள் விலைகளைத் தீர்மானிப்போம்” என பத்திரன தெரிவித்தார்.

 “விலை திருத்தம் குறித்து முடிவெடுப்பதற்கு முன், மாற்று விகிதம், வரிகள் மற்றும் பிற செலவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பார்க்க வேண்டும்.” என்றும் அவர் கூறினார். 

Related Articles

Leave a Reply

Back to top button