வடகீழ் பருவப் பெயற்சி மழை தற்போது ஓய்ந்துள்ள நிலையில் அவ்வப்போது ஓரளவு மழை பெய்து வருகின்ற போதிலும், மாவட்டத்திலுள்ள பெரும்பாலான சிறு குளங்கள் நிரம்பியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இந்நிலையில் நீர் நிரம்பிக்காணப்படும் அக்குளங்களுக்கு அழகு சேர்க்கும் வண்ணம் வெண்டாமரை, அல்லி, மற்றும் வெங்காயத்தாரை போன்றன பூத்துக்குலுங்குவதையும், அதனை அப்பகுதியில் பயணம் செய்யும் மக்கள் பார்த்து இரசித்து வருவதையும், அவதானிக்க முடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதியில் அமைந்துள்ள பெரியபோரதீவு பெரியகுளம், கோவீல்போரதீவுக்குளம், பொறுகாமம்குளம், வெல்லாவெளிக்குளம், பழுகாமத்துக்குளம் உள்ளிட்ட பல பகுதிகளிலும், அமைந்துள்ள சிறு குளங்களில் இகாட்சியை அவதானிக்க முடிகின்றது. இது பாடுவாங்கரைப் பகுதிக்கு மேலும் அழகு சேர்ப்பதாக அப்பகுதிவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். செய்தியாளர் – சக்தி