இலங்கைசெய்திகள்

அவசிய துறைகளுக்கு மட்டும் எரிவாயு விநியோகம்!!

gas

நாடு பூராகவும் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் மற்றும் விற்பனை என்பனவற்றை இடைநிறுத்த நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண உத்தரவிட்டிருந்தார். இருப்பினும்,

கைத்தொழில்துறைகள் மற்றும் தகனசாலைகளுக்கு மாத்திரம் திரவ பெற்றோலிய எரிவாயுவை விநியோகிக்க இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

எரிவாயு கசிவை கண்டறியும் மணத்தை உருவாக்கும் எதில் மெகப்டன்(Ethyl Mercaptan) பதார்த்தம், கொள்கலனில் 14 அலகுகளாக இருக்கவேண்டிய நிலையில்இ அது தற்போது 5 அலகுகளாக உள்ளதன் காரணமாகஇ எரிவாயு விநியோகம் மற்றும் விற்பனை என்பன இடைநிறுத்தத் தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button