தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு சுமார் 4 பேரளவில், அதிகரித்து இருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்த்ரிக் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் கயான் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் எரிபொருளை வீடுகளிலோ அல்லது கடைகளிலோ சேமித்து வைப்பதனால் சிறுவர்கள், முதியவர்கள் அதனை தவறுதலாக எடுத்துப் பயன்படுத்துவதால் அதிக விபத்துகள் சம்பவிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும், இவ்வாறான திடீர் விபத்துகளால் தற்போது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வழமையைவிட அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே, இவ்வாறு வீடுகளில் எரிபொருளைச் சேமிப்பவர்கள் அதிக கவனத்துடன் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.