அன்றாடம் நாம் விரல்களைப் பயன்படுத்தி செய்யும் வேலைகள் மிக அதிகம். நம் நாட்டின் தலையெழுத்தைக் கூட எமது விலர் நுனியால்தான் நாம் தீர்மானிக்கின்றோம். தொழிநுட்ப வரம் பெருகிவிட்ட இக்காலத்தில் விரல் நுனிகளின் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. விரல் நுனிகள் எவ்வாறு எந்த அளவிற்கு பயன்படுகின்றது என்பதை விரிவாகப் பார்ப்போம்….
விரலின் எலும்புகள் நகம் முடியும் வரை செல்லாமல், நகத்தின் பாதியிலேயே நின்று விடுகின்றன. இதனாலேயே எம்மால் வேகமாக பணம் எண்ண முடிகிறது. முழு நீளமும் எலும்பு இருந்தால் இத்தனை வேகமான பணம் எண்ணுவது கடினம்.
நாம் வளர, வளர விரல் நுனியின் செயல்திறனும் நம்முடன் சேர்ந்து வளர்கின்றது. சிறு வயதில் விரல் நுனியால் செய்த வேலைகளை வயது ஆக ஆக நேர்த்தியாக செய்வோம். உதாரணமாக சிறு வயதில் பென்சில், வெண்கட்டி போன்றவற்றை எளிதில் உடைத்துவிடும் நாம் வளர்ந்த பின்பு அப்படிச் செய்வதில்லை.
நம்முடையை திறன் வளர்ந்தாலும் விரல் நுனி பெரிதாகாது. புகைப்பழக்கம், மதுப்பழக்கம் மற்றும் கல்லீரல் பிரச்சினை உள்ளவர்களின் விரல்கள் தான் வீங்கி பெரிதாக காணப்படும்.
ஒவ்வொரு விரல் நுனியும் உணர்ச்சி மிகுந்தது. அதனாலேயே இரத்தப்பரிசோதனை செய்யும் போது விரல் நுனியில் குருதி எடுக்கின்றனர்.
கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல்கள் ஒப்பீட்டு அளவில் அதிக அளவில் உணர்வுகளை மூளைக்கு அனுப்பும் திறன் கொண்டவை. . இதனால் தான் நாணயங்களைத் தொட்டுப்பார்த்து எளிதில் கண்டறியமுடிகிறது.
விரல் நுனியில் காயம் ஏற்பட்டுவிட்டால் உடனடியாக சிகிச்சை செய்துவிட வேண்டும். ஏனென்றால் புண் பெரிதாகி விரல் பழைய உணர்வு திறனை இழந்துவிடும்.