இலங்கைசெய்திகள்

அத்தியாவசிய சேவைகளாக வைத்தியசாலை சேவைகள் – மின்சாரம் என்பன பிரகடனம்!!

Extraordinary Gazette

வைத்தியசாலை சேவைகள் மற்றும் மின் விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், நேற்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், குறித்த சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, மின்சார விநியோகம், வைத்தியசாலைகள், சிகிச்சையகங்கள், மருந்தகங்கள் மற்றும் அது போன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, உபசரிப்பு, சிகிச்சை ஆகியவை தொடர்பில் ஆற்றப்படவேண்டிய அனைத்து அவசியமான அல்லது தேவைப்படும் தேவைகள் மற்றும் பணிகள் என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button