Breaking Newsஇலங்கைசெய்திகள்
புலமைப்பரிசில் பரிசில் பரீட்சை திருத்தப்பணி தொடர்பில் வெளியான அறிவிப்பு!!
Exam results

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிக்கான விண்ணப்பங்கள் இணையவழி முறையின் ஊடாக மாத்திரமே பெற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் முதலாம் திகதி வரை விண்ணப்பங்களுக்கான அழைப்பு மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/ என்ற இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பங்களை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இணையவழி பயன்பாடுகளை அதன் அதிகாரப்பூர்வ மொபைல் ஃபோன் பயன்பாடு DOE மூலமாகவும் அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.