செய்திகள்விளையாட்டு

அபுதாபி அணியின் உதவி பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் வீராங்கனை ஒருவர் நியமனம்

இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் பேட்டர் சாரா டெய்லர், (batter Sarah Taylor) ஆண்களுக்கான தொழில்முறை உரிமை கிரிக்கெட்டில் முதல் பெண் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் அபுதாபி டி10 போட்டிக்கான அபுதாபி அணியின் உதவி பயிற்சியாளராகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அபுதாபி T10 இன் ஐந்தாவது பதிப்பு, ஐக்கிய அரபு இராச்சியத்தின் உலகப் புகழ்பெற்ற ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நவம்பர் 19 முதல் டிசம்பர் 4 வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில் கிரிக்கட் வரலாற்றில் சிறந்த விக்கெட் காப்பாளர்களில் ஒருவராகக் கருதப்பட்ட டெய்லர், ஐக்கிய இராச்சியத்தில் சசெக்ஸ் உடன் ஆண்கள் கவுண்டி அணியில் முதல் பெண் சிறப்பு பயிற்சியாளராக செயற்படுகிறார்.

டெய்லர், சசெக்ஸுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

Related Articles

Leave a Reply

Back to top button