Breaking Newsஇந்தியாசெய்திகள்
இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நிலநடுக்கம்!!
Earthquake

ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் இன்று அதிகாலை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
லடாக் பகுதியின் லே அருகே ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் இன்று அதிகாலை 3.50 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல், லடாக்கின் லே மாவட்டத்திலிருந்து வடகிழக்கே 295 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை 2.16 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்க்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உறுதியான விவரங்கள் வெளியாகவில்லை.
லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரில் நேற்று இரவும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.