7.7 மெக்னிடியுட் அளவிலான சக்திவாய்ந்த (சில ஊடகங்கள் 6.8 மெக்னிடியூட்) நிலநடுக்கம் பாகிஸ்தானை உலுக்கியதாகவும், பல்வேறு நகரங்களில் அதிர்வு உணரப்பட்டதாகவும் ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத் உட்பட பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய மாநிலங்களின் பல்வேறு நகரங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
முதற்கட்ட தகவல்களின்படி, ஆப்கானிஸ்தானில் உள்ள ஃபைசபாத்தில் இருந்து 77 கிலோமீற்றர் தென்கிழக்கே 6.8 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பெஷாவர், கோஹாட் மற்றும் ஸ்வாபி ஆகிய இடங்களிலும், லாகூர், குவெட்டா, ராவல்பிண்டி ஆகிய இடங்களிலும் வலுவான நடுக்கம் ஏற்பட்டது.
*இந்தியாவிலும், வட மாநிலங்களில் உள்ள மக்கள் வலுவான நடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.