மனித செயற்பாடுகளால் புவி வெப்பமயமாகும் நிலை அதிகரித்து வரும் நிலையில் விஞ்ஞானிகள் எச்சரிக்கை ஒன்று விடுத்துள்ளனர்.
எதிர்வரும் 5 வருடங்களில் புவியின் வெப்பநிலை 1.5 பாகை செல்சியஸ்ஸினால் அதிகரிப்பதற்கான சாத்தியப்பாடுகள் 50 சதவீதம் அளவில் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து்ள்ளனர்.
அதன்படி, 2022 முதல் 2026 வரையான காலப்பகுதியில், உலக நாடுகளில் அதிகளவான வெப்பநிலை பதிவாகும் என ஆராய்ச்சியாளர்களால் கூறப்பட்டுள்ளது.
கடந்த முப்பது வருடங்களாக புவி வெப்பமடைதலானது ஒரு சீரான நிலையில் அதிகரித்து வருகின்றது என்பதுடன் மனித படத்தையே இதற்கான காரணம் என்பதும் கருத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும்.