ஐந்து கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருக்கும் அல்லது விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு *மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை* வழங்கப்படவுள்ளது.
*இது தொடர்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ள நச்சு பொருள், அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் சட்டம் தற்போது அமுலில் உள்ளது.*
*இன்று முதல் இந்த புதிய சட்டத்தின் கீழ் குற்றம்புரிந்தவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.*
கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி, நச்சுப்பொருள், அபின், அபாயகர ஒளடதங்கள் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
போதைப்பொருளை கொண்டு வருதல், வைத்திருத்தல் மற்றும் பயன்படுத்தல் தொடர்பில் காலத்தின் தேவைக்கு ஏற்ப சட்டங்களை வலுப்படுத்தும் வகையில் இந்தச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.