இலங்கைசெய்திகள்

சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் வெளியான தகவல்!!

Driving license

சாரதி அனுமதி பத்திரத்தை அச்சிட்டு தபால் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் பெற்ற சுமார் 6 இலட்சம் பேருக்கு இவ்வாறு அனுப்பப்படவுள்ளதாகவும் திணைக்களத்திற்கு 5 இலட்சம் சாரதி அனுமதி பத்திர அட்டைகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அட்டைகள் தட்டுப்பாடு காரணமாக ஒரு நாள் சேவையின் ஊடாக 50 அனுமதிப் பத்திரங்கள் மாத்திரமே வழங்கப்படுவதாகவும் அடுத்த வாரத்தில் இருந்து இந்த எண்ணிக்கை 300 ஆக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளாந்தம் சுமார் 1700 சாரதி அனுமதி அட்டைகள் வழங்கப்படுவதாகவும், வருடாந்தம் சுமார் 08 இலட்சம் அட்டை தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button