இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும்!

சகல தரங்களுக்குமான பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வேதன முரண்பாடு உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி கடந்த நாட்களில் இணையவழி கற்பித்தல் முறைமைகளிலிருந்து விலகி ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்திருந்த அவர்கள், எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு செல்வதற்கு தீர்மானித்தனர்.

200க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்நிலையில் 2 இலட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் உள்ள போதிலும் அவர்களில் 10,000 ஆசிரியர் மாத்திரமே பாடசாலைகளுக்கு சமூகமளிப்பர் என ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

சகல தரங்களையும் சேர்ந்த மாணவர்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரிய சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button