செய்திகள்பொருளாதார செய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதி வேகமாக வீழ்ச்சி!!

Dollar

 அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(02.06.2023) வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதற்கு முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த மூன்று வாரங்களாக மீண்டும் அதிவேக வளர்ச்சியை பதிவு செய்து வந்தது.

எனினும் நேற்றையதினத்துடன்(01.06. 2023) ஒப்பிடுகையில், அமெரிக்க டொலர், யூரோ, பிரித்தானிய பவுண்ட் உள்ளிட்ட பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி இன்றையதினம் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (02.06.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை  300.32 ரூபாவாகவும், கொள்வனவு விலை  287.42 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி  324.74 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி  308.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 377.51 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி  359.07 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button