சிறு குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பிளாஸ்டிக் பொம்மைகள் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும் இதனால் இவற்றின் விற்பனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை கவனம் செலுத்தியுள்ளது.
பிளாஸ்டிக் மட்டுமின்றி பல்வேறு இரசாயனங்கள் அடங்கிய பல்வேறு வகையான வர்ணங்களும் இந்த பொம்மைகளில் பயன்படுத்தப்படுவதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் சரோஜனி ஜயசேகர தெரிவித்துள்ளதுடன் மர பொம்மைகளைப் பயன்படுத்துவது தொடர்பில் பெற்றோர் அக்கறை கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்