இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

யாழில். மழைக்குள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஐ.நா. அலுவலக முன்றலில் கொட்டும் மழையிலும் இன்று சனிக்கிழமை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாண மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், தமது பிள்ளைகளை உலக நாடுகள் மீட்டுத்தர வேண்டும். இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த அரசாங்கத்தில் நம்பிக்கையில்லை, சர்வதேசமே நமக்கு தீர்வை கொடு போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button