உலகம்செய்திகள்

கின்னஸில் இடம்பிடித்த நாய்!!

dog

21 ஆண்டுகள் 66 நாட்களைத் தாண்டி வாழ்ந்து வரும் நாய் ஒன்று, அதிக நாட்கள் உயிர் வாழ்ந்த நாயாக கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வாழும் இந்த டோபிகீத் (TobyKeith) நாயானது சிஹுவாஹுவா வகையைச் சேர்ந்தது. 2001-ம் ஆண்டு ஜனவரி 9 தேதி பிறந்த இந்த நாய்க்கு தற்போது 21 வயதாகிறது. க்ரீனாக்ரேஸின் கிசெலா ஷோர் தனது செல்லப்பிராணியின் சாதனையை முகநூலில் பகிர்ந்துள்ளார்.

பொதுவாக சிஹுவாஹுவா இன நாய்களின் சராசரி ஆயுட்காலம் 12 முதல் 18 ஆண்டுகள் வரை மட்டுமே. ஆனால் கிசெலாவின் நாய் 21 வயது 66 நாட்களை கடந்து வாழ்ந்து வருகிறது. எனவே, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்ததோடு, ‘உலகின் மிகப் பழமையான நாய்’ என்ற பெருமையையும்
இநத நாய் பெற்றுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button