அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் இன்று (21) நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பணிபகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு வவுனியாவிலும் ஆதரவு வழங்கப்பட்டது.
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் இடமாற்றச் சபையின் அனுமதியின்றி சுகாதார அமைச்சின் தன்னிச்சையான முடிவின் கீழ் மருத்துவப் பணிகளுக்கு புதிதாக மருத்துவர்களை பிழையான விதத்தில் நியமித்தமைக்கு எதிராக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA)குறித்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் வவுனியா வைத்தியசாலையிலும் அதற்கு ஆதரவு வழங்கப்பட்டதுடன், அவசர சிகிச்சைபிரிவு, மற்றும் ஏனைய அத்தியவசிய மருத்துவ சேவைகள் அனைத்தும் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை வவுனியா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் கடுமையான சுகவீனத்திற்காக சிகிச்சைக்காக வருகை தந்தவர்களிற்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன் ஏனைய நோயாளர்கள் சிகிச்சையினை பெற்றுக்கொள்ளாமல் திரும்பி சென்றிருந்தனர்.
செய்தியாளர் கிஷோரன்.