இலங்கைசெய்திகள்

மீண்டும் மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்குத் தடை!!

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாயின்மீண்டும் வைபவங்களுக்கான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

பொறுப்பற்ற வகையில் மக்கள் நடந்து கொள்வார்களாயின் விருப்பமின்றியேனும் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய நிலைமை ஏற்படுமெனத் தெரிவித்துள்ள பணிப்பாளர் நாயகம் பல விழாக்கள் விருந்துபசாரகள் திருமண வைபவங்கள் ஊடாகவே கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன என்றும்

பொதுமக்கள் இவ்வாறு நாளுக்கு நாள் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவார்களாயின் பொது வைபவங்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்றுமுன்தினம் 617ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை நேற்றுமுன்தினம் (06) ஆக அதிகரித்துள்ளது.

அன்றையதினம் 20 பேர் மரணித்துள்ளனர். அதில் 14 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button