Breaking Newsஇலங்கைசெய்திகள்

ஜனக்க ரத்னாயக்க  பதவி நீக்கம்!!

Dismiss

  இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து் தன்னை நீக்குவதற்காக முன்மொழியப்பட்ட காரணங்கள் குறித்து தமக்கு அறிவித்தல் கிடைத்துள்ளதாக ஜனக்க ரத்னாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கும் பதிலானது நிதி, பொருளாதார உறுதிபடுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருக்கு இன்று (28) அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்கவை நீக்குவதற்கான குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆணைக்குழுவின் அனைத்து செயற்பாடுகளையும் தீர்மானங்களையும் ஆணைக்குழுவாக அன்றி தனது தனிப்பட்ட கருத்தின் அடிப்படையிலேயே ஜனக்க ரத்நாயக்க மேற்கொண்டுள்ளார் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்த ஜனக்க ரத்னாயக்க, தம்மீதான குற்றப்பத்திரிக்கையை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக கூறியிருந்தார்.

அத்துடன், அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட மின்கட்டண திருத்தத்துக்கும் ஜனக்க ரத்னாயக்க எதிர்ப்பு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button