மக்கள் திட்ட ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொருளாதார நெருக்கடியை எலவ்வாறு கையாள்வது மற்றும் மாகாணங்களில் இடம்பெற்று வரும் நில அபகரிப்புக்கு எதிரான கலந்துரையாடல் ஒன்று இன்று (05.03.2022) வவுனியா எழுதுவினைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது .
குறிப்பாக தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எவ்வாறு கையாள்வது வடமாகாணங்களில் இடம்பெற்று வரும் குள அபகரிப்பு மேய்ச்சல்தரை நிலங்கள் அபகரிப்பு மகாவலி ஆக்கிரமிப்பு கிராம வீதிப் போக்குவரத்து மாணவர்களிடையே அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை இதன்போது பொலிசாரின் ஒத்துழைப்புக்கள் மற்றும் நடவடிக்கைகள் என்பன போன்ற மக்கள் எதிர்நோக்கும் விடயங்கள் குறித்து மாவட்ட அமைப்பாளர்களுடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது .
இக்கலந்துரையாடலில் மக்கள் திட்ட ஒன்றியத்தில் மாகாண இணைப்பாளர் திரு . ந . தேவகிருஷ்ணன் மற்றும் மாகாண செயலாளர் , அமைப்பாளர்கள் , மாவட்ட அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர் .
செய்தியாளர் – கிஷோரன்