இலங்கைசெய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் விடுத்துள்ள கோரிக்கை!!

Director, Jaffna Teaching Hospital

யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் விபத்துக்களும்இ உயிரிழப்புக்களும் தொடரும் நிலையில் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் மற்றும் பொலிஸார் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யவேண்டும். என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்இ வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறுஇ

மேற்படி வீதி புதிப்பிக்கப்பட்ட பின்னர் விரைவாக பயணத்தை மேற்கொள்ளும் வாகனங்களில் சில மோதுண்டு பல உயிர்கள் பலி எடுக்கப்பட்டுள்ளன. பலர் அங்கவீனம் ஆக்கப்பட்டுள்ளனர்.

நூற்றுக்கணக்கான கால்நடைகள் விபத்துகளில் சிக்கி மடிந்து போயின. வைத்தியசாலைகளின் சத்திரசிகிச்சை விடுதிகள் இவ்வாறான விபத்துகளினாலும் ஏனைய விபத்துகளினாலலும் நிரம்பி வழிகின்றன. இந்த அவல நிலை தொடரலாமா? இதை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வருவது ?

  1. அரசு உயரதிகாரிகள் கலந்துரையாடி நீண்ட காலத்தில் பிரச்சனை தீர்க்க வழிகளை ஏற்படுத்த முடியும்.
  2. சாரதிகள் இப்பகுதிகளில் மெதுவாக பயணிக்கும் மனநிலையில் இருக்க வேண்டும்.
  3. காவல்துறையினர் வேகக்கட்டுப்பாட்டை அமுல்படுத்தவேண்டும்
  4. கால்நடைகளின் உரிமையாளர்கள் கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் ( உரிமையாளர்கள் கால்நடைகளின் உயிர் பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை)

மேற்கூறப்பட்ட நான்கு விடயங்களும் உடனடியாக அமுலுக்கு வரும் சாத்தியக்கூறுகள் குறைவாகவே காணப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் விபத்துக்களில் இருந்து எவ்வாறு தப்பித்துக் கொள்வது ? வாகனங்களில் பிரயாணிக்கும் ஏனையவர்கள் வாகன சாரதியை வேகத்தை கட்டுப்படுத்தி

50 மஅ ற்கும் குறைவான வேகத்தில் பிரயாணிக்க மிகக்கடுமையாக அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும்.வேறு வழிகள் இருப்பதாக தெரியவில்லை ?

Related Articles

Leave a Reply

Back to top button