உலகில் அதிக விலையுள்ள மிகப்பெரிய வைரம் டுபாயில் சோத்பை நிறுவனம் நடத்திய கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.
303.1 கரட் எடை கொண்ட மஞ்சள் நிற கோல்டன் கேனரி வைரம், வெட்டப்பட்ட வைரங்களில் உலகிலேயே மிகப்பெரிய ஒன்றாகும்.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் 1980 களில் கண்டுபிடிக்கப்பட்ட இதன் மதிப்பு சுமார் 15 மில்லியன் அமெரிக்க டாலர் எனவும், டிசம்பர் 7ஆம் திகதி நியூயார்க்கில் ஏலம் விடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.