இலங்கைசெய்திகள்

சாதாரணதர மாணவர்களுக்கு அடையாள அட்டைக்குப் பதிலாக கடிதம்!!

Department of Persons Registration

ஆட்பதிவு திணைக்களம் சாதாரண மாணவர்கள் தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக கடிதமொன்று வழங்கப்படவுள்ளதாக அத்திணைக்களம் கூறியுள்ளது.

ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க (Viyani Gunathilaka) மேலும் கூறுகையில்,
தேசிய அடையாள அட்டைக்குப் பயன்படுத்தப்படும் அட்டையை சிக்கனப்படுத்தும் நோக்குடன், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும் குறித்த கடிதம் செல்லுபடியாகும் எனவும்

ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் கடிதம் விநியோகிக்கப்பட்டு மூன்று மாதங்களின் பின்னர் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related Articles

Leave a Reply

Back to top button