இலங்கைசெய்திகள்

டெங்கு நோயினால் குழந்தைகளின் கல்லீரல்  பாதிப்படையும் அபாயம்!!

Dengue

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்லீரல் பாதிப்படைவதை தடுப்பதற்கு பெற்றோர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சலில் இருந்து மீண்ட குழந்தைகள் மீண்டும் கடுமையான வேலையில் ஈடுபட்டால் கல்லீரலில் ஏற்படும் பாதிப்பு கடுமையாக இருக்கும் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்தியர் தீபால் பெரேரா, டெங்கு நோய் குணமானதும், ஓரிரு வாரங்களுக்கு, குழந்தைக்கு அதிக உடல் உழைப்பை கொடுக்க வேண்டாம் எனவும் கல்லீரல் பாதிக்கப்பட்டால், மூளையை பாதிக்கும். எனவே, டெங்கு நோயை இலகுவாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, குழந்தைகள் மருத்துவமனையில் இன்று சுமார் 40 டெங்கு நோயாளிகள் உள்ளதாகவும் குழந்தைகள் மத்தியில் அறிகுறிகள் இருந்தால் இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் இரத்த பரிசோதனை செய்து கொள்ளுமாறும் உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறும் வைத்தியர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அதிக அளவில் பாராசிட்டிமால் கொடுத்தால், அது குழந்தையின் கல்லீரலை சேதப்படுத்தும் எனவும் குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

நாட்டில் டெங்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் வருடத்தின் ஆரம்பம் முதல் கடந்த 9ஆம் திகதி வரை இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 31,993 ஆகும்.

அதன்படி, அதிக டெங்கு பரவும் மாகாணமாக மேல் மாகாணம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நேற்றைய (10) நிலவரப்படி மேல்மாகாணத்தில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 15,746 ஆகும்.

அதற்கமைய நேற்று (10) மத்தேகொட கிழக்கு கிராம அதிகாரியின் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்பட்ட 11 இடங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button