இலங்கைசெய்திகள்

யாழில் பிரபல பாடசாலையின் உயர்தர மாணவி தற்கொலை!!

death

யாழ்ப்பாணத்தில் உயர்தரவகுப்பில் கல்வி கற்கும் மாணவியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அரியாலை பிரதேசத்தில் இன்று அதிகாலை 1 மணியளவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மாணவியான பிரேமச்சந்திரன் திசாரா (17) என்பவரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த மாணவி இன்றைய தினம் செயன்முறை பரீட்சை தொடர்பாக பாடசாலைக்கு வருமாறு ஆசிரியரால் அழைக்கப்பட்டிருந்தார்.

அதற்கான தயார்ப்படுத்தல்களை செய்துவிட்டு குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக தொலைக்காட்சி பார்த்துவிட்டே மாணவி இந்த தவறான முடிவை எடுத்துள்ளதாக உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


தற்போது இளையோர் மத்தியில் இவ்வாறான தவறான முடிவுகள் மூலமான தற்கொலைகள் அதிகரித்துச் செல்வதும் அதுவும் வடமாகாணத்தில் அதிகரித்திருப்பதும் வேதனைக்குரிய விடயமாகும்.
சமூகஆர்வலர்கள் இவ்விடயத்தில் கவலை வெளியிட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button