சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஹுங்கம காவல்நிலையத்திலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
பௌர்ணமி தினமான நேற்று ஹுங்கம ரன்ன பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்துஇ குறித்த விடுதிக்கு விரைந்த காவல்துறையினர் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டில்இ நபரொருவரை கைதுசெய்ததுடன்இ மதுபானம் அடங்கிய 12 போத்தல்களையும் கைப்பற்றினர்.
இந்நிலையில்இ குறித்த நபர் காவல்நிலைய சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளையில் திடீரென சுகயீனமடைந்து கீழே விழுந்துள்ளார்.
அதன்பின்னர் அவர் ரன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கபப்பட்டபோது உயிரிழந்துள்ளார். ரன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இந்நபர் உயிரிழந்ததையடுத்து பிரதேச மக்கள் நேற்று எதிர்ப்பில் ஈடுபட்டனர். எவ்வாறாயினும் நோய் நிலைமை காரணமாகவே அவர் உயிரிழந்ததாக ஹுங்கம காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.