கோவை பொலிஸ் அதிகாரி டி.ஐ.ஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டி.ஐ.ஜி விஜயகுமார் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் ஆக தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக அவர் பணியாற்றியுள்ளார்.
சாத்தான்குளம் இரட்டைக் கொலை சி.பி.சி.ஐ.டி எஸ் . பி ஆக அப்பொழுது பணியாற்றி விசாரணை நடத்தினார்.
டி.ஐ.ஜி யின் இந்த தற்கொலைக்கு குடும்பப் பிரச்சினை காரணமாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மனைவியுடன் கோவையில் வசித்து வந்த அவர் இன்று காலையில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபயிற்சி முடித்து வீடு திரும்பிய பின்னர் தற்கொலை செய்துள்ளார்
.இவர்., தனது பாதுகாவலரின் துப்பாக்கியைப் பிடுங்கி தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேற்று சக அதிகாரி ஒருவரின் மகளின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜயகுமார். இன்று காலையில் சுமார் 6.50 மணியளவில் உயிரை மாய்த்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது..
விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது உடல் , உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கபப்ட்டுள்ளது.