இலங்கைசெய்திகள்

வவுனியா சிவாச்சாரியார் கொரோனாவால் மரணம்!!

death

வவுனியா, குடியிருப்பு ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் பிரதம குருக்களும், வவுனியாவின் மூத்த சிவாச்சாரியருமாகிய கணபதிசித்தர் சிவஸ்ரீ.க.கந்தசாமி குருக்கள் இன்று (01) அதிகாலை மரணமடைந்தார்.

சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

71 வயதான அவர் யோகாசன கலைஞராகவும், ஜோதிட வல்லுனராகவும் திகழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவரது சடலம் சுகாதார நடைமுறைகளிற்கமைய பூந்தோட்டம் இந்து மயானத்தில் இன்று எரியூட்டப்பட்டது.

செய்தியாளர் கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button