சினிமாசெய்திகள்

சிவசங்கர் மாஸ்டர் காலமானார்!!

death

‘திருடா திருடி’, ‘மகதீரா’, ‘பாகுபலி’ உள்ளிட்ட படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியதோடு தமிழ் மற்றும் தெலுகில் முன்னணி நடன இயக்குநராக வலம் வந்தவர் சிவசங்கர்.

‘மகதீரா’ படத்தில் ஒரு பாடலுக்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இது தவிர ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘தில்லுக்கு துட்டு’,‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு கொவிட் தொற்று உறுதியானது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவசங்கருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  அவரது மனைவி, மூத்த மகன் ஆகியோருக்கும் தொற்று உறுதியான நிலையில் அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எனினும் சிவசங்கரினது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரின்  சிகிச்சைக்காக சோனு சூட், தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் உதவ முன்வந்தனர்.

இந்நிலையில் இன்று (28) சிவசங்கர் மாஸ்டர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button