இலங்கைசெய்திகள்

மின்சாரம் தாக்கி முதியவர் பலி!!

death

மின்சாரம் தாக்கி முதியவர் பலி. வவுனியா நொச்சிமோட்டை துவரங்குளம் பகுதியில் விலங்குகளுக்காக பொருத்தப்பட்ட மின்சார இணைப்பில் சிக்கி முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.


குறித்த முதியவர் தனது வீட்டிலிருந்து நேற்று (27) காலை5 மணியளவில் மரவள்ளி கிழங்குகளை பறிப்பதற்காக அருகில் உள்ள தோட்டக்காணிக்கு சென்றுள்ளார்.
எனினும் நீண்டநேரமாகியும் குறித்த முதியவர் வீட்டிற்கு வராத நிலையில் அவரது மனைவி அவரை தேடியுள்ளார்.


இதன்போது அவரது தோட்ட காணியில் சடலமாக கிடந்தமை அவதானிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்தில் நொச்சிமோட்டை பகுதியை சேர்ந்த துரைச்சாமி சுப்பிரமணியம் வயது 69 என்ற முதியவரே மரணமடைந்துள்ளார். 


குறித்த முதியவர் விலங்குகளுக்காக பொருத்தப்பட்டிருந்த மின்சார இணைப்பில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


செய்தியாளர்  கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button