இலங்கைசெய்திகள்

2022ம் ஆண்டுக்குரிய இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் சுற்றுப்போட்டிகள் ஆரம்பம்!!

Cricket Association tournaments

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் 2022ம் ஆண்டுக்குரிய 17வயதிற்குட்பட்ட மற்றும் 15 வயதிற்குட்பட்ட சுற்றுப்போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. அந்த வகையில் நேற்று புதன்கிழமை 05.01.2022 யாழ் இந்துக்கல்லூரி மைதான ற்றும் யாழ் இந்துக் கல்லூரி அணிகள் மோதிய 50 ஓவர்களைக் கொண்ட போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 324 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்துக் கல்லூரி அணி 47.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் மத்திய கல்லூரி அணியின் தலைவர் அஜய் 144 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது..

15 வயதிற்குட்பட்ட மற்றுமொரு சுற்றுப்போட்டியில் நேற்று புதன்கிழமை 05.01.2022 யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 15 வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையேயான போட்டி ஒன்றில் யாழ் மத்திய கல்லூரி மற்றும் அனுராதபுரம் மத்திய கல்லூரி அணிகள் மோதிய 50 ஓவர்களைக் கொண்ட போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அனுராதபுரம் மத்திய கல்லூரி அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 119 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ் மத்திய கல்லூரி அணி 37 ஓவர்களில் 6 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை சுவீகரித்தது.

செய்தியாளர் : மாறன்

Related Articles

Leave a Reply

Back to top button