செய்திகள்விளையாட்டு

சென்னை சுப்பர் கிங்ஸ் மும்பையை வீழ்த்தியது!!

Cricket

 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதின. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 139 ஓட்டங்களை எடுத்தது. 

அறிமுக வீரர் நேஹால் வதேரா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து, 64 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். சென்னை அணி சார்பில் பதீரனா 3 விக்கெட்டும், தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதையடுத்து, 140 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. 

தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் அதிரடியாக ஆடினார். 16 பந்தில் 2 சிக்சர், 4 பவுண்டரி உட்பட 30 ஓட்டங்களை குவித்தார். 

ரகானே 21 ஓட்டத்திலும், அம்பதி ராயுடு 12 ஓட்ட ஆட்டமிழந்தனர். டேவன் கான்வே பொறுப்புடன் ஆடி 44 ஓட்டத்திலும் வெளியேறினார். 

இறுதியில், சென்னை அணி 140 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் சென்னை அணி 6வது வெற்றியைப் பதிவு செய்தது.

Related Articles

Leave a Reply

Back to top button