வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொவிட்-19 PCR பரிசோதனை அறிக்கை தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இருப்பினும், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் விமான நிலையத்தில் வந்து சேருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன், அவர்கள் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் PCR அறிக்கையை விமான நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு வருபவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கொவிட் தொற்று ஏற்பட்டிருந்தால், அவர்கள் தற்போது தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த 48 மணி நேரத்திற்குள் முன் மேற்கொள்ளப்பட்ட உடனடி அன்டிஜென் அறிக்கை போதுமானது.
அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் அதனை நிரூபிக்க தேவையான ஆவணங்களையும் வைத்திருக்க வேண்டும்.
இதேவேளை, நாட்டில் இருந்து புறப்படும் போது விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை என தெரிவிக்கப்
பட்டுள்ளது.