இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கையில் பெருகும் கொவிட் தொடர்பில் வெளியான தகவல்!!

Covid

இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்று நிலைமை ஏற்பட்டால் அதனை முன்னர் போன்று கட்டுப்படுத்துவது சிரமமாகி அது பேழிவை ஏற்படுத்தும் வகையில் அமையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுச் சுகாதார பரிசோதர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

தற்பொழுது பல நாடுகளில் கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்று அலை ஏற்பட்டால் அது மிக மோசமானதாக இருக்கக்கூடும்

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

இலங்கையிலும் எதிர்காலத்தில் கொவிட் தொற்று நிலை ஏற்படக்கூடிய அனர்த்தம் நிலவுவதாக சுகாதார பிரிவு எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் அனைத்து தரப்பினரும் குறிப்பிட்ட வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொது மக்கள் சுகாதார பரிசோதர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button