இலங்கைசெய்திகள்

உண்மை நிலையை கல்வி அமைச்சு வெளிப்படுத்த பின் நிற்பது ஏன்?

colombo

” நேற்று முன்தினம் கொழும்பு பம்பலபிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் முன் பகுதியளவான பெற்றோர்கள் பழைய மாணவர்கள் ஒன்று கூடி விழிப்புணர்வு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்
.அக் கோரிக்கைகளில்

  1. பாடசாலை பணியாளர் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட மாணவியின் முறைப்பாட்டைப் பெற்றவுடன் உடனடியாக பொலிசாருடன் தொடர்பு கொண்டு பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமை ஏன் ?
    2 , குற்றஞ் சாட்டப்பட்டுள்ளவரை உடனடியாக பாடசாலையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
    3,
    பாதிக்கப்பட்ட பிள்ளையை பாடசாலையை விட்டு விலக்கியமை வாபஸ் பெறப்படவேண்டும்.
    4,
    தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தும் வகுப்பறைகளை மாணவர்களின் தேவைக்காக கையளிக்கவேண்டும்
    5,
    உயர்தர வகுப்புகளில் பற்றாக்குறையாக உள்ள பாடங்களுக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்கவேண்டும் எனவும்
    6,
    பெற்றோர், ஆசிரியர் , பழைய மாணவர்களுடன் சுமுகமான உறவைப்பேணி பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தை உடனடியாக கூட்டவேண்டும்

கல்வி அமைச்சினால் உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உபகரணங்களை உடனடியாகப் பகிரவேண்டும்
7,
பாடசாலைக்கு பெண் பாதுகாப்பு உத்தியோகத்தரை நியமிக்கவேண்டும்
ஆகிய கோரிக்கைகள் பிரதானமானவை ..

இப்பிரச்சினையின் அமுக்கம் தொடர்பாக எமது ஐவின்ஸ் இணையத்தளம் கடந்த வாரம் வழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது .இது தொடர்பாக
பாடசாலை அதிபரைத தொடர்புகொண்டு வினவியபோது, மாணவியின் பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கை ஏற்கனவே அதாவது 2020 இல் நடந்த சம்பவம் எனவும்அதற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் அது தொடர்பில் அமைச்சில் விசாரணை நடைபெற்று வருவதால் அப்பிரச்சினை தொடர்பாக தன்னால் நடவடிக்கை எடுக்கமுடியாது எனவும் , குறிப்பிட்ட குற்றஞ்சுமத்தப்பட்ட நபரை பதவி நீக்கும் அதிகாரம் தனக்கு இல்லை எனவும் பாடசாலையில் சில கல்வி , ஆசிரியர் நடத்தை சார் மாற்றங்களை மாணவர் நலன்கருதி தான் முன்னெடுக்க முற்பட்டபோது அது விரும்பாத குறிப்பிட்டளவு ஆசிரியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கிலேயே இந்த சந்தர்ப்பத்தை தனக்கு எதிராக (ஆசிரியர்கள் சிலர்) பயன் படுத்தி உள்ளார்கள் என்வும , குறித்த மாணவி சுயமாகவே பாடசாலையை விட்டு விலகியுள்ளார் எனவும் அதிபர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறிருக்க, பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் முன்னெடுக்கப்பட்டு பெற்றோர்களின் கோரிக்கைக்கு அமைவாக சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

எப்படியெனினும் உண்மை நிலையை கண்டறிந்து தொடர்பு மேலதிகாரிகள. நடவடிக்கை எடுக்கும் வரை ஐவின்ஸ்தமிழ் இணையதளமானது இவ்விடயம் தொடர்பில் தொடர்ந்து பின்தொடர்ந்து செய்திகளை பிரசுரிக்கும்.

Related Articles

Leave a Reply

Back to top button