பொலிஸ் தலைமையத்திற்கு முன்பாக சோசலிச இளைஞர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 09 ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்னணியில் உள்ளவர்களைக் கைது செய்யுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதன் காரணமாக பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.