இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் வத்தளை, திக்கோவிட்ட கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் குறித்த சடலம் கையொதுங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
35 – 40 வயதுடையவர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.