ஆடிகம, சிப்பெட்கோ எரிபொருள் நிலையத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட தவறான எரிபொருள் காரணமாக அனைத்து டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்கள் நடுவீதியில் பழுதடைந்துள்ளதால் அங்கு பதற்ற சூழ்நிலை உருவானது.
நேற்று (26ஆம் திகதி) மாலை தொடக்கம் இன்று (27ஆம் திகதி) வரை ஆடிகம நகரில் உள்ள ஒரேயொரு எரிபொருள் நிரப்பு நிலையம் என்பதனால் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், லொறிகள், கார்கள் என ஏறக்குறைய 3000 வாகனங்கள் கராஜுக்கு இழுத்துச் செல்ல வேண்டிய நிலைமை.
எரிபொருளைப் பெற்றவர்கள். சில வாகனங்கள் அங்கேயே நின்றுவிட்டதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.பெட்ரோல் நிலையங்களில் இருந்து பெறப்படும் பெட்ரோல், டீசலைப் போல உள்ளது என பெட்ரோல் வாகன உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருள் பெற்றுச் சென்ற வாகனங்கள் அனைத்தும் வழியிலேயே நிறுத்தப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இது தொடர்பில் வாகன உரிமையாளர்களுக்கு தாங்கள் பொறுப்பு கூறுவதாகவும் ஆனால், எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருளை கொண்டு வந்த பௌசரின் சாரதி மற்றும் உதவியாளர் மீதே பிழை எனவும் எரிபொருள் நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் மற்றும் டீசலுக்கான தனித் தாங்கிகளை அமைத்துள்ளதாகவும், சாரதியும் உதவியாளரும் இரண்டு வகையான எரிபொருளை மாற்றி எரிபொருளைக் கொண்டு வந்த பௌசரை இறக்கியதையடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும்
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் சிரமப்படும் அனைவருக்கும் எரிபொருள் வழங்கவும் பழுதடைந்த வாகனங்களுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்று (27) பிற்பகல் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய நிர்வாகி திரு.சோமரத்ன, குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் மாதிரிகளைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் குறித்த எரிபொருள் மீட்டருக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுத்தார்.வாடிக்கையாளரிடம் இருந்து எரிபொருளைப் பெற்றுக் கொண்டு, எரிபொருள் நிரப்பு நிலையத்தின் நிலைமை குறித்து விரைவில் ஆராயப்படும் எனத் தெரிவித்தார்.