திருமணமாகாதவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு சீனாவின் மாகாணமொன்று சட்டபூர்வ அனுமதியை வழங்கியுள்ளது.
திருமணமாகாதவர்கள் குடும்ப வாழ்வில் ஈடுபடுவதற்கும் திருமணமாணவர்களிற்கான சலுகைகளை அனுபவிப்பதற்கும் சீனாவின் வடமேற்கு சிச்சுவான் மாகாணத்தின் சுகாதார அதிகாரிகள் அனுமதியளிக்க உள்ளது.
பிறப்பு வீதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை தொடர்ந்தே இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவில் திருமணமான பெண்கள் மாத்திரமே குழந்தை பெற்றுக்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எனினும் திருமண மற்றும் பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதை குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் திருமணமாகதவர்களுக்கு சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.
பெப்15 ம் திகதி முதல் வாரிசு குறித்து விருப்பமுடைய திருமணமாணவர்கள் மற்றும் தனிநபர்கள் சீனாவின் சனத்தொகை அதிகமாக காணப்படும் ஐந்தாவது மாநிலத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.
எத்தனை பிள்ளைகளை வேண்டுமென்றாலும் அவர்கள் பதிவு செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீண்டகால மற்றும் சீரான மக்கள் தொகையை ஊக்குவித்தல் என்ற அடிப்படையிலேயே அதிகாரிகள் இந்த முடிவிற்கு வந்துள்ளனர்.
இதுவரையில் இரண்டுகளை பெற்றுக்கொள்ள விரும்பும் திருமணமான தம்பதியினர் மாத்திரம் தங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.
சீனாவின் சனத்தொகை கடந்த ஆறுதசாப்த காலத்தில் முதல் தடவையாக வீழ்ச்சியடைந்துள்ளது.