இந்தியாசெய்திகள்

சென்னையில் பறக்கும் தட்டுகள்!!

Chennai

 சென்னையின் கடல் பகுதிக்கு மேல் வானத்தில் மர்ம தட்டுகள் பறந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

பல்வேறு உலக நாடுகளும் ஏலியன்ஸ் என்று கூறப்படும் வேற்றுக்கிரக வாசிகள் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகளை.மேற்கொண்டு வருகிறது. இச்சூழலில் சென்னையில் இவ்வாறு தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 26 ஆம் திகதி மாலையில் சென்னையை அடுத்த முட்டுக்காடு கடல் பகுதியில்  மர்மமான முறையில் 4 பறக்கும் தட்டுகள் வானில் பறந்துள்ளது எனவும் ஓய்வு பெற்ற சிபிசிஐடி போலீஸ் டிஜிபி பிரதீப் அவர்கள்,  தரையில் இருந்து பார்க்கும் போது வெளிச்சமாக மட்டுமே தெரிந்த இந்த பறக்கும் தட்டுகளை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. 

முட்டுக்காடு கடற்கரையில் மாலை 5.30 மணிக்கு அமர்ந்திருந்த போது பிரதீப் பிலிப்பின் கண்ணில் நான்கு ஒளி தென்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனது ஐபோனில் அதனை புகைப்படம் எடுத்து புகைப்படத்தை ஜும் செய்து பார்த்த போது பறக்கும் தட்டு போன்று நான்கு உருவம் தெரிந்துள்ளது.

புகைப்படங்களில் உள்ளவை டிரோன் போலவோ சிறிய விமானம் போலவோ இல்லை..அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் தட்டாகவே அவை உள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அந்தப் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். 

இந்நிலையில் இது குறித்து உரிய ஆய்வு செய்தால் மட்டுமே பறக்கும் தட்டில் வந்தவர்கள் யார் என்பது தெளிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பறக்கும் தட்டில் உண்மையிலேயே ஆட்கள் இருந்தார்களா? இல்லையா? அது நோட்டம் பார்ப்பதற்காக விடப்பட்ட பறக்கும் தட்டா என்பது குறித்து ஆராய்சி நடத்த வேண்டும் என பறக்கும் தட்டு ஆராய்ச்சியாளரான சபீர் உசேன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா பாராளுமன்றத்தில் அந்த நாட்டின் முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் இது தொடர்பாக பரபரப்பான தகவல்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button