இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவி தற்கொலை – கதறும் தாயார்!!

Chavakachcheri

 யாழ்.  சாவகச்சேரியில் பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.  

டிலக்சிகா எனும் மாணவியே இவ்வாறு  விபரீத முடிவால் உயிரை மாய்த்துள்ளார்.

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் எதிர்பார்த்த அளவு பெறுபேறு கிடைக்கவில்லை என மாணவி உயிரை மாய்த்துள்ளதாகத் தெரியவருகின்றது.

உயிரிழந்த மாணவியின் தந்தையும் இறுதி யுத்தத்தில் மரணமடைந்ததுவிட தாயார் மிகவும் வறுமையின்  மத்தியில் அவரைப் படிக்கைவைத்ததாகக் கூறப்படுகின்றது.

 மாணவியின் இந்த முடிவால்  பாடசாலை தரப்பும் அக்கிராமத்தினரும்  பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அற்ப காரணங்களுக்காக இளையோர் உயிரை மாய்க்கும் நிலைமை தற்போது அதிகரித்துக் காணப்படுவதாகவும் இந்நிலை மாற சம்பந்தப்பட்ட தரப்பினர் அக்கறை கொள்ள வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button