பிற்போடப்பட்ட மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களின் நியமனத்தை விரைவில் வழங்குவது தொடர்பில் நாளை மறுதினம் நிதியமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
இதற்கமைய, 306 பேருக்கான நியமனத்தை உடனடியாக வழங்குவது குறித்து நிதியமைச்சருடனான சந்திப்பில் தீர்மானிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அவர்களில் 219 பேர் தமிழ் மொழி மூல ஆசிரிய உதவியாளர்களாகுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் அரச சேவைக்கு புதிய ஆட்சேர்ப்பில்லை என நிதியமைச்சர் அண்மையில் அறிவித்திருந்தார்.
இதனால் கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் நியமனங்கள் வழங்கப்படவிருந்த நிலையில், அது பிற்போடப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், ஏற்கனவே ஆசிரிய உதவியாளர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளமையினால் அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.
இது தொடர்பில் நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகலவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரச சேவையாளர்களுக்கு வழங்கப்படும், 5 ஆயிரம் ரூபா நிவாரண கொடுப்பனவு ஆசிரிய உதவியாளர்களுக்கும் வழங்குவது தொடர்பில் இதுவரை தெளிவுப்படுத்தப்படவில்லை.
அதற்கான சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டதன் பின்னர் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே குறிப்பிட்டார்.