உலகம்செய்திகள்

கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீ – அவரச நிலை பிரகடனம்!!

Canada

ஆல்பர்ட்ரா: கனடாவின் ஆல்பர்ட்ரா மாகாணத்தில் காட்டுத் தீ பற்றி எரிவதால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆல்பர்ட்ரா மாகாணத்தில் உள்ள டிரையிங் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2 நாட்களாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. காற்றின் வேகம் காரணமாக அடுத்தடுத்து 110 இடங்களில் நெருப்பு பற்றி எரியும் நிலையில், 36 இடங்களில் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியே கரும்புகை மண்டலமாக மாறியுள்ளது.

ஹெலிகாப்டரில் தண்ணீர் கொண்டு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆல்பர்ட்ரா மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு 24 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். அங்குள்ள எண்ணெய் உற்பத்தி நிறுவனத்தில் ஏற்பட்ட கசிவால் இந்த விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button