இலங்கைசெய்திகள்

கிளிநொச்சி இ.போ.ச வினர் பணிப் புறக்கணிப்பு!!

C.T.B

கிளிநொச்சி இ.போ.ச சாலையினர் இன்று பணிப்புறக்கணிப்பு மேற்கொண்டுள்ளனர்.

பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையைக் கண்டித்து , குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குமாறு கோரியே இந்தப் புறக்கணிப்பு இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் கிளிநொச்சி, கண்டாவளைப் பகுதியில் வைத்து இ.போ.ச சாரதி மற்றும் நடத்துநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்விடயம் குறித்து தருமபுரம் பொலிஸ் நிலையத்தின் முறைப்பாடு செய்யப்பட்டது.

தாக்குதலுக்கு உள்ளானவர்கள் கிளிநொச்சி வைத்திய சலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆறு பேர் தாக்குதல் நடத்தியபோதும் மூன்று பேர் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் ஏனைய மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினால் மாத்திரமே தமக்குப் பாபாதுகாப்பு எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் ஏனைய பிரதேச இ.போ.ச ஊழியர்களையும் இந்த பணிப்புறக்கணிப்பு இணைய கோருவோம் என அவர்களால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button