அடுத்த ஆண்டு முதல் பேருந்து பயணக் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஆரம்ப கட்டணம் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 17 ரூபாவாக நிலவும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் ஏனைய பேருந்து பயணக்கட்டணங்கள் 17 சதவீதத்தால் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த புதிய கட்டணங்கள் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் அமுலாகும் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.