பிரித்தானிய மன்னராக மூன்றாவது சார்ல்ஸ் உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வரலாற்று நிகழ்வு, சென் ஜேம்ஸ் மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே சார்ள்ஸ், காலஞ்சென்ற எலிசபெத் மகாராணியால் மன்னராக பெயரிடப்பட்டிருந்தார்.
இது தொடர்பான வரலாற்று நிகழ்வு, சென் ஜேம்ஸ் மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே சார்ள்ஸ், காலஞ்சென்ற எலிசபெத் மகாராணியால் மன்னராக பெயரிடப்பட்டிருந்தார்.
வேல்ஸ் புதிய இளவரசர் மற்றும் இளவரசியாக வில்லியம் மற்றும் கேட் ஆகியோரை அறிவித்தார் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ்.
ஹாரி மற்றும் மேகன் இருவருக்கும் எனது அன்பை வெளிப்படுத்த விரும்புகிறேன் என மன்னர் அறிவிப்பு.
வில்லியம் மற்றும் அவரது துணைவியார் கேட் ஆகியோரை வேல்ஸின் புதிய இளவரசர் மற்றும் இளவரசியாக பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் அறிவித்தார்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து, பிரித்தானியா உட்பட 14 நாடுகளுக்கு புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் தனது தாய் மற்றும் நாட்டின் மகாராணி உயிரிழந்த பிறகு, மன்னராக மூன்றாம் சார்லஸ் முதல் முறையாக நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றினார்.
இந்த உரையில் தனது மாட்சிமையின் வாரிசாக அவரது மூத்த மகன் வில்லியம் மற்றும் மருமகள் கேட் ஆகிய இருவரையும் வேல்ஸின் இளவரசர் மற்றும் இளவரசியாக மன்னர் மூன்றாம் சார்லஸ் அறிவித்தார்.