இலங்கைசெய்திகள்

சதொசாவில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலை!!

Batticaloa

செய்தியாளர் – கிஷோரன்

சதொச விற்பனை நிலையத்தில் அவசிய பொருட்களை வாங்குவதாயின் தனியாக வாங்க முடியாது மற்றுமொரு பொருளை வாங்கினாலே வழங்க முடியும் என இன்றையதினம் சதொச விற்பனை நிலையத்தில் கூறப்பட்டுள்ளது.

இவ் விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா நெளுக்குளத்தில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையத்திற்கு அவசிய பொருட்கள் வாங்குவதற்காக வாடிக்கையாளர் சென்றுள்ளார். அங்கு சில பொருட்கள் இல்லை. அந்நிலையில் பருப்பு மட்டுமே இருந்துள்ளது.

குறித்த நபர் 1 கிலோ பருப்பினை கொள்வனவு செய்தபோது சதொச விற்பனையாளர்கள் அவ்வாறு 1 கிலோ பருப்பினை வழங்க முடியாது எனவும் ஒருவருக்கு 500 கிராம் மட்டுமே வழங்க முடியும் எனவும், தனியாகவே பருப்பினை வழங்க முடியாது அதனுடன் வேறு பொருட்களை கொள்வனவு செய்தால் மட்டுமே வழங்க தமக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.

குறித்த விற்பனை நிலையத்தில். பொருட்கள் கொள்வனவு செய்யும் பிரதி ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில்
16.03.2022 முதல் விற்பனை செய்யும் போது பின்வரும் பொருட்கள் பொதுமக்களுக்கு சமமாக விற்கப்பட வேண்டும் என்பதால், பின்பற்ற வேண்டிய நிபந்தனையாக செயல்பாட்டுப் பிரிவின் மறு அறிவிப்பு வரும் வரை இந்த கட்டுப்பாடுகள் தொடரும் என்பதனை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

சீனி (சர்க்கரை) குறியீடு பொருட்களை விற்கும்போது ஒரு வாடிக்கையாளருக்கு விற்ககூடிய அதிகபட்ச அளவு ஒரு கிலோ கிராம் ஆகும். பொருட்களை கொள்வனவு செய்யும் போது அதனுடன் மற்றொரு பொருளை (சில்லறை அல்லது மசாலா) வாடிக்கையாளர் வாங்க வேண்டும் என இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

Related Articles

Leave a Reply

Back to top button