இலங்கைசெய்திகள்

சிங்கள ஆசிரியர்களுக்கான தழிழ்மொழி அடிப்படை பயிற்சி!!

Basic training in Tamil language for Sinhala teachers

முன்பள்ளி ஆசிரியர்களிற்கான தழிழ்மொழி அடிப்படை பயிற்சி வழங்கும் நிகழ்வு வவுனியா “றகமா” பயிற்சி மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இப்பயிற்சிக்கான வளவாளராக,

வவுனியா தெற்கு சிங்களப்பிரிவு. கோட்டக்கல்வி அதிகாரி, வரிதிசிங்க செயற்பட்டிருந்தார்

மொழிதெரியாத காரணத்தினால் எந்தவொரு தேவைக்கும் தனிப்பட்ட தேவைகளுக்கும் மற்றும் அலுவலகத்திற்கு சென்றாலும் மொழிப்பெயர்ப்பாளரின் தேவை உணரப்படுகின்றது இதனை நோக்கமாக கொண்டு குறித்த செயற்திட்டம் உருவாக்கப்பட்டது

“றகமா” நிறுவனத்தின் இப்பியிற்சி நெறியினூடாக 41முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மொழியாற்றலை வளர்ப்பதனுடாக தொடர்பாடலை வலுப்படுத்தல் மற்றும் சிறார்களிடையே இனநல்லிணக்கத்துடனும் சமத்துவத்துடனும் செயற்படுதலுடன் தழிழ் மொழி பற்றிய அடிப்படை மொழித்திறனை ஏற்படுத்தி அவர்களின் தொடர்பாடல் திறனை விருத்தி செய்து எதிர்காலத்தில் அவர்களை சிங்கள, தமிழ்மொழிவளவாளர்களாக உருவாக்குதலை இது முதன்மையான நோக்கமாக கொண்டுள்ளது.

இப்பயிற்சி வகுப்பு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு

காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செய்தியாளர் கிஷோரன்.

Related Articles

Leave a Reply

Back to top button